×

மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மாடுகள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

திருபுவனை: மதகடிப்பட்டு வாரசந்தைக்கு இன்று வரத்து அதிகமானதால் மாடுகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். புதுச்சேரி, மதகடிப்பட்டில் வாரந்தோறும் நடைபெறும் செவ்வாய்கிழமை வாரசந்தையில் காலை 5 மணி முதல் 10 மணி வரை மாடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும். கடந்த சில வாரங்களாக இந்த சந்தையில் மாடுகள் நல்ல தொகைக்கு விலை போயின. ஆனால் இந்த வாரம் 11 மணி வரைக்கும் மாடுகள் விற்பனையாகவில்லை.சென்ற வாரம் 20 ஆயிரத்துக்கு விலைபோன கன்றுக்குட்டி, இன்று ரூ. 10 ஆயிரம் மட்டுமே விலை கேட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் கூறும்போது, கடந்த 25 ஆண்டுகளாக மாடுகளை விற்று வருவதாகவும் இதுவரையில் இதுபோல விலை குறைவு ஏற்பட்டது இல்லை, எனவும் கூறினார்….

The post மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மாடுகள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Madakatpattu ,Tirupuvanai ,Madakpattu ,Madakattu ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை